விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் இன்றுடன் முடிவடைகிறது!

விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் முடிய இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இதுவரை லேண்டர் குறித்து எந்த தகவலும் இல்லை.
 | 

விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் இன்றுடன் முடிவடைகிறது!

விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் முடிய இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இதுவரை லேண்டர் குறித்து எந்த தகவலும் இல்லை. 

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு நிலைகளை வெற்றிகரமாக கடந்து செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை நிலவின் தென் பகுதியில் தரையிறங்கியது. அப்போது கடைசி சில நிமிடங்களில் நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் தனது தொடர்பை துண்டித்துக் கொண்டது.

இதன் பிறகு ஆர்பிட்டரின் உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியது. இதற்கு நாசாவும் உதவி செய்வதற்கு முன் வந்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டது. விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் நிலவில் ஒரு நாள் ஆகும். அதாவது பூமியில் 14 நாட்கள் ஆகும். செப்டம்பர் 7ம் தேதி  நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இரு வாரங்கள் ஆகியும் இதுவரை எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP