சமூக வலைதளங்களில் ட்ரண்டாகும் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கும் குரங்கின் வீடியோ!!

இரண்டு குரங்குகள் இடையான சண்டையை தொடர்ந்து, அதில் காயமடைந்த ஒரு குரங்கு செடிக்கல் ஷாப்பில் மருங்கு வாங்கும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
 | 

மேற்கு வங்காள மாநிலத்தில் மல்லாக்பூர் ரயில்நிலையத்தில் இரண்டு குரங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு குரங்கு பலத்த காயமடைந்துள்ளது. இதை தொடர்ந்து, அருகே உள்ள மருந்து கடைக்கு சென்ற அந்த குரங்கு சண்டையினால் தனது  கைகளிலும், கால்களிலும் ஏற்பட்ட காயங்களை மருந்து கடைக்காரரிடம் காண்பித்துள்ளது. குரங்கின் செயலை கவனித்த கடைக்காரர் குழம்பிய போதும், அதன் காயங்களை கண்டதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தனது காயங்களை அவரிடம் அழகாக காண்பித்த அந்த குரங்கு மருந்து போட வேண்டும் என்றும் செய்கை செய்துள்ளது. காயங்களை சரி செய்வதற்காக தான் இங்கே வந்துள்ளது என்பதை உணர்ந்த அந்த கடைக்காரர் குரங்கின் காயங்களுக்கு மருந்து போட்டுள்ளார். 

மேலும், தனது காயங்களை சரி செய்வதற்காக வழங்கிய மருந்துகளையும் உண்ட பின்னரே அந்த கடையை விட்டு சென்றுள்ளது அந்த குரங்கு.

உடல்நிலை சரியில்லையெனில் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மருந்து வாங்க வேண்டும் என்ற குரங்கின் சமயோசித புத்தி மருந்து கடைக்காரர் மட்டுமல்லாது, அப்பகுதியில் உள்ள அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ ட்ரண்டாகி வருகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP