பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டவர் வீர் சாவர்க்கர்: சத்தீஸ்கர் முதல்வரின் சர்ச்சை பேச்சு!

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு முதலில் வித்திட்டவர் வீர் சாவர்க்கர் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பேகல் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பாகிஸ்தான் பிரிவினைக்கு வித்திட்டவர் வீர் சாவர்க்கர்: சத்தீஸ்கர் முதல்வரின் சர்ச்சை பேச்சு!

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவதற்கு முதலில் வித்திட்டவர் வீர் சாவர்க்கர் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் மிகமுக்கியமானவர் வீர் சாவர்க்கர். இவர் சமூக சீர்திருத்தவாதி, தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவர்; இந்து மகாசபையை உருவாக்கியவர்; சுதந்திரப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயரால் 50ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, மிகக்கொடூரமான அந்தமான் சிறையில் காலத்தை கழித்தவர். வீர் சாவர்க்கர் எழுதிய 'இந்திய சுதந்திரப் போராட்டம்-1857' எனும் நூல் வெளிவரும் முன்பே தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்ற ஒரு தலைவரை விமர்சித்து, சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர். டெல்லி ராஜிவ் பவனில் நேற்று ஜவஹர்லால் நேருவின் 55- ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற கூட்டத்தில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பேசினார்.

அப்போது அவர், "இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முதலில் வித்திட்டவர் வீர சாவர்க்கர் தான். அவருடைய எண்ணத்தைத் தான் முகமது அலி ஜின்னா, பின்னர் நிறைவேற்றியுள்ளார். இது வரலாற்று உண்மை. இந்த உண்மையை தவறு என்று யாரும் கூற முடியாது" என்று பேசியுள்ளார்.

இது பாஜக தலைவர்கள் மத்தியில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பதிலளித்துள்ள பாஜக துணைத் தலைவர் ரமண் சிங், "பூபேஷ் குறைந்தபட்ச அறிவை வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் இன்னும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இந்திய-  பாகிஸ்தான் பிரிவினை பற்றி பேச விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், பல பாஜக தலைவர்களும் பூபேஷின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP