முன்பதிவு ஆரம்பித்த சில நாட்களில் விற்று தீர்ந்த 'வந்தே பாரத் ரயில் டிக்கெட்கள்"

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஆரம்பித்த ஒரு வாரத்திற்குள் அக்.12ஆம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
 | 

டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் கத்ரா வைஷ்ணவா தேவி கோவிலுக்கு செல்ல புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த  "வந்தே பாரத் விரைவு ரயில்" சேவையை கடந்த 3ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். இதை தொடர்ந்து அக்டோபர் 5ஆம் தேதி முதல் வர்த்தக ஓட்டம் தொடங்கியது. 

இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மூலம், டெல்லி - கத்ரா இடையேயான 655 கி.மீ தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடந்துவிடலாம். 16 பெட்களை கொண்ட இந்த ரயிலில் 1,100 பயணிகள் பயணிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கிய  ஒரு வாரத்திற்குள், அக் 12 ஆம் தேதி வரை உள்ள பயணத்திற்கான ரயிலின் அனைத்து இருக்கைகளும் முன்பதிவாகிவிட்டன. இதனால் அக்.7 முதல் 12 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்திலும், அக்.19 ஆம் தேதியிலும் முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட்டை பெற முடியாது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP