பயணிகள் பயன்பாட்டுக்கு 'வந்தே பாரத்' தயார்: இந்திய ரயில்வே

இந்தியாவிலேயே மிக வேகமான ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்', கோளாறு காரணமாக டெல்லி அருகே நின்றதாக தகவல்கள் வெளியான நிலையில், பயணிகள் பயன்பாட்டுக்கு ரயில் தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 | 

பயணிகள் பயன்பாட்டுக்கு 'வந்தே பாரத்' தயார்: இந்திய ரயில்வே

இந்தியாவிலேயே மிக வேகமான ரயிலான 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்', கோளாறு காரணமாக டெல்லி அருகே நின்றதாக தகவல்கள் வெளியான நிலையில், பயணிகள் பயன்பாட்டுக்கு ரயில் தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே மிக வேகமான ரயில் என அறிமுகம் செய்யப்பட்ட 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். வாரணாசியிலிருந்து டெல்லிக்கு ரயில் சென்று கொண்டிருந்த நிலையில், டெல்லியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் கோளாறு காரணமாக ரயில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், மாடு ஒன்று ரயிலின் குறுக்கே வந்ததாகவும், அதை மோதியதால் ரயில் நிறுத்தப்பட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஒரு சில பெட்டிகளில் மின்தடை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ரயிலை முழுவதுமாக பரிசோதித்து விட்டதாகவும், பயணிகள் பயன்பாட்டுக்கு திட்டமிட்டபடி இன்று முதல் கொண்டுவரப்படும், என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஸ்மிதா ஷர்மா பேசியபோது, "இந்தியாவின் முதல் நடுநிலை அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், வெற்றிகரமாக தனது முதல் ஓட்டத்தை டெல்லியிலிருந்து வாரணாசி வரை முடித்துள்ளது. ஞாயிறு(இன்று) முதல், டெல்லியிலிருந்து பயணிகளுக்கான ஓட்டம் திட்டமிட்டபடி துவக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ரயில் நிறுத்தப்பட்டது குறித்து கேட்டபோது, "வாரணாசியிலிருந்து ரயில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, சம்ரவுலா ரயில் நிலையத்தின் அருகே, கடைசி நான்கு பெட்டிகளுக்கும், ரயிலுக்கும் உள்ள தொடர்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் பின்னர், ரயிலில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் செயல்பட்டு, ரயில் நின்றது. பின்னர், கோளாறுகளுக்காக ரயில் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு, டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது" என்று கூறினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP