நேருவின் சொல்லை செயலாக்கிக் காட்டிய வாஜ்பாய்!

அடல் பிகாரி வாஜ்பாய் சொற்பொழிவு நடத்துவதில் கைத்தேர்ந்தவர். மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றப்பின் வாஜ்பாய் உரை ஆற்றியது. அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. காங்கிரஸை கடுமையாக சாடிய வாஜ்பாயின் பேச்சு சபையில் அனல்பறந்தது.
 | 

நேருவின் சொல்லை செயலாக்கிக் காட்டிய வாஜ்பாய்!

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவும் இடையேயான உறவு புனிதமானது என்றே கூறலாம்.

அடல் பிகாரி வாஜ்பாய் மிகச்சிறந்த பேச்சாளர். மக்களவை உறுப்பினராக தேர்வாகி அவையில் அவரது கன்னிப் பேச்சு பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து மக்கள் அவையில் சிறப்பாக தன்னுடைய பேச்சுத் திறனை வெளிப்படுத்தினார். இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. காங்கிரஸை கடுமையாக சாடிய வாஜ்பாயின் பேச்சு சபையில் அனல்பறந்தது.

ஆளுங்கட்சிகளை இவ்வளவு வெளிப்படையாக நேருக்கு நேர் யாரும் எதிர்த்து பேசியது கிடையாது. முதல்முறையாக காங்கிரஸ் குறித்த அவரது பேச்சு அவையில் தெறிக்கவிட்டது. இதையடுத்து மக்களவை உறுப்பினர்களால் ஈர்க்கப்பட்ட அவர், அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்றார். 

வாஜ்பாயின் உரைகளை கேட்டபிறகு ஜவகர்லால் நேரு,  “ இந்த இளைஞன் கண்டிப்பாக இந்தியாவின் பிரதமராவான்” எனக்கூறி வாஜ்பாயின் கையைக் குலுக்கினார். நேருவின் வாக்குப்படி ஒரு முறை அல்ல 3 முறை இந்தியாவின் பிரதமராகி பெருமைசேர்த்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP