நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் படம் திறப்பு

நாடாளுமன்றத்தின் மைய அரங்கில், மறைந்த பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரிய வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்தார்.
 | 

நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் படம் திறப்பு

நாடாளுமன்றத்தின் மைய அரங்கில், மறைந்த பிரதமர் வாஜ்பாயின் முழுஉருவப் படம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், உருவப்படத்தை திறந்து வைத்தார். துணைக் குடியரசுத்தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய அமைச்சர்கள் விழாவில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் கடந்த 1924ம் ஆண்டில் பிறந்த வாஜ்பாய், நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்குரிய வாஜ்பாய், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP