குஜராத் கனமழை: வதோதரா விமானநிலையம் மூடல்!

குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வதோதரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது என விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

குஜராத் கனமழை: வதோதரா விமானநிலையம் மூடல்!

குஜராத் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வதோதரா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு  கனமழை பெய்தது. நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் 3 அடி அளவுக்கு வெள்ளம் போல் தேங்கியுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வதோதரா விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியுள்ளது. விமான ஓடு பாதையில் தண்ணீர் தேங்கியிருப்பதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி வரை விமானங்கள் இயக்கப்படாது என விமான நிலையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓடு பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP