வடபழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்தத் தடை?

வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

வடபழனி முருகன் கோவிலில் செல்போன் பயன்படுத்தத் தடை?

வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடபழனி முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். முக்கியமாக, செவ்வாய்க்கிழமை, கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் கூட்டம் அலைமோதும்.

இந்நிலையில், பக்தர்கள் பலர் கோவிலுக்குள் செல்போனுடன் வலம்வருகின்றனர். அதாவது, 'செல்பி' எடுப்பது, சன்னதியின் அருகில் நின்றுகொண்டு செல்போனில் பேசுவது, செல்போனில் பேசிக்கொண்டே கோவிலை சுற்றி வருவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் மற்ற பக்தர்களுக்கு இது இடையூறாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பக்தர்களின் அமைதியான வழிபாட்டிற்காக வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிக்க, இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இதேபோன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும், பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP