2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து தேர்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் 2019ம் ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
 | 

2019ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு வெளியானது!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்து தேர்வு நடத்தி வருகிறது. அவற்றில், ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் உள்ளிட்ட 26 பதவிகளுக்கான தேர்வு, நாட்டிலேயே அரசுப்பணிகளுக்கான மிக கடினமான தேர்வாக கருதப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த 'சிவில் சர்வீஸ் தேர்வு', போட்டித்தேர்வுகளிலே முதன்மையான தேர்வு என்ற பெயரை பெற்றது. 

இந்நிலையில், 2019ம் ஆண்டிற்கான தேர்வு குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 896 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. நேற்று முதலே ஆன்லைனில் விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 18 ஆகும். 

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்று படிநிலைகள் உள்ளன. முதல்நிலைத் தேர்வு(Preliminary Exam), முதன்மைத் தேர்வு(Main Exam), நேர்காணல்(Interview). மூன்று நிலைகளிலும் வெற்றி பெற்றால், தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் உள்ளிட்ட பணிகள் வழங்கப்படும். 

தேர்வு குறித்த விபரங்கள்:-

காலிப்பணியிடங்கள்: 896

விண்ணப்பம் தொடங்கும் தேதி: பிப்ரவரி 19, 2019

விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 18, 2019

கல்வித்தகுதி: இளங்கலைப் பட்டம்(Degree) பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 21-32 (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு(Age Relaxation) உள்ளது)

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/- (பொதுப்பிரிவினர், பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர்),  எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 2, 2019

இதர விபரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தை காணவும். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP