உ.பி. அவலம்: உயிரோடு இருந்த நாய் மீது சாலை

ஆக்ராவில் உயிரோடு இருந்த நாய் மீது சாலை அமைக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 | 

உ.பி. அவலம்: உயிரோடு இருந்த நாய் மீது சாலை

ஆக்ராவில் உயிரோடு இருந்த நாய் மீது சாலை அமைக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சையத் கிராஸிங் என்ற இடத்திலிருந்து தாஜ்மஹால் நோக்கி உள்ள சாலை புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக அந்த சாலையில் ஊழியர்கள் தார் கொட்டி உள்ளனர். இதில் சாலையோரம் உறங்கி கொண்டு இருந்த நாய் ஒன்று இருப்பதை கவனிக்காமல் அதன் மீது கொதிக்கும் தாரை ஊற்றி ரோடு ரோலர் மூலம் சாலையை சமன் செய்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதில் அந்த நாய் நசுங்கி உயிரிழந்துள்ளது.

சாலையில் பாதியளவு புதையுண்டிருந்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. ஏராளமானோர், சாலை கட்டுமான நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் இச்செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதனிடையே நாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆக்ராவின் சதார் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP