உ.பி, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்!

உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவராக அம்மாநில ஓ.பி.சி பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஸ்வதந்திரா தேவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

உ.பி, மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்கள் மாற்றம்!

உத்தரப்பிரதேசம் மாநில பாஜக தலைவராக அம்மாநில ஓ.பி.சி பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஸ்வதந்திரா தேவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் புதிய பாஜக தலைவர்களை நியமித்து அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி,  உத்தரப்பிரத்சே மாநில பாஜக தலைவராக பதவி வகித்து வந்த மகேந்திர நாத் பாண்டே அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு , புதிய தலைவராக ஸ்வதந்திரா தேவ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்வதந்திரா தேவ் சிங் முன்னதாக அம்மாநிலத்தின் ஓ.பி.சி பிரிவினரின் தலைவராக இருந்தார். 

அதேபோன்று  மகாராஷ்டிரா மாநிலத்தின் பாஜக மாநில தலைவராக இருந்தவர் ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே. இவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, சந்திரகாந்த் பாட்டீல் மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP