பனாரஸ் பல்கலைகழகம் : ஆயுர்வேதத்திலும் ஃபெரோஸ் கான் அசத்தல்!!

பனாரஸ் பல்கலைகழகத்தில், கடந்த 7ஆம் தேதி, சமஸ்கிருத போராசிரியராக நியமிக்கப்பட்ட டாக்டர் ஃபெரோஸ் கானிற்கு எதிராக அப்பல்கலைகழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தன் சொந்த ஊருக்கே திரும்பி சென்ற ஃபெரோஸ் கான், இன்று அதே பல்கலைகழகத்தின் ஆயுர்வேத துறையக்கான பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 | 

சமஸ்கிருத போராசிரியராக ஓர் இஸ்லாமியர் நியமிக்கப்படக்கூடாது என்று, டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அப்பல்கலைகழக மாணவர்கள். இதை தொடர்ந்து, சமஸ்கிருத பாடத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றும், தனது மதத்தை காரணம் காட்டி போராட்டம் மேற்கொள்ளப்படுவதால் மன உளைச்சலுக்குள்ளான அவர், தனது சொந்த ஊரான ஜெர்பூருக்கே சென்று விட்டதாக பல்கலைகழக நிர்வாகம் கூறியிருந்தது.

இந்நிலையில், இன்று அப்பல்கலைகழகத்தில் நடைபெற்ற ஆயுர்வேத துறைக்கான பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்டுள்ளார் டாக்டர் ஃபெரோஸ் கான். இதை தொடர்ந்து, இவரை பற்றி கூறும் ஆயுர்வேத துறை நிர்வாகி யாமினி பூஷன், சமஸ்கிருதம் மட்டுமல்லாது ஆயுர்வேத துறையிலும் ஃபெரோஸ் கான் அசத்துவதாகவும், அவர்தான் இந்த தேர்வில் பங்கு கொண்ட அனைவரை விடவும் மிகவும் திறமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். யாமினி மட்டுமல்லாது அப்பல்கலைகழகத்தின் பல பேராசிரியர்களும் அவரை பற்றிய மிக சிறப்பான கருத்துக்களையே முன்வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை தொடர்ந்து, சமஸ்கிருத பேராசிரியராக இல்லாத போதும், ஆயுர்வேத பேராசிரியராக இவர் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP