Logo

பனாரஸ் பல்கலைகழகம் : சமஸ்கிருத துறை திறக்கப்பட்ட நிலையிலும் தொடரும் மாணவர் போராட்டம்!!

கடந்த வெள்ளியன்று பல்கலைகழகத்தின் சமஸ்கிருத துறை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், அத்துறையின் பேராசிரியராக டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 | 

பனாரஸ் பல்கலைகழகத்தில், கடந்த 7ஆம் தேதி, சமஸ்கிருத போராசிரியராக நியமிக்கப்பட்ட டாக்டர் ஃபெரோஸ் கானிற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பல்கலைகழக மாணவர்கள். இதை தொடர்ந்து, மன உளைச்சலுக்குள்ளான ஃபெரோஸ் கான் அவரது சொந்த ஊரான ஜெர்பூருக்கே சென்று விட்டதாக பல்கலைகழக நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதை தொடர்ந்து, இன்று சமஸ்கிருத துறை மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையிலும், போராட்டத்தை கைவிடாது தொடர்ந்து வருகின்றனர் சில மாணவர்கள். இது குறித்து போராட்டத்தை வழிநடத்தி வரும் சக்கிரபானி ஓஜா கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஃபெரோஸ் கானிற்கு எதிராக போராடவில்லை என்றும், பனாரஸ் பல்கலைகழகம் 1915ஆம் ஆண்டிற்கான சட்டப்படி, இந்து அல்லாத பேராசிரியர் சமஸ்கிருத பாடத்தை நடத்த கூடாது என்ற விதியை பல்கலைகழகம் மீறியுள்ளதால் தான் இந்த போராட்டம் என்று கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP