மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் ஒப்புதல்!

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 14 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
 | 

இந்திய வங்கிகளிடம் ரூ.9000 கோடி கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்து முயற்சி செய்து வந்தன. இந்திய தரப்பில் இருந்து லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்த்ரேட் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் மல்லையாவை நாடு கடத்தலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

மல்லையாவை நாடுகடத்துவது குறித்து பரிசீலனை செய்ய, லண்டன் நீதிமன்றம், பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், அவரை நாடு கடத்த உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மல்லையாவுக்கு 14 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP