மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.. ராகுல் காந்தி புறக்கணிப்பு?

மகாராஷ்டிரா மாநிலத்தின் 18வது முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். ராகுல் காந்தி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது.
 | 

மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.. ராகுல் காந்தி புறக்கணிப்பு?

மகாராஷ்டிரா மாநிலத்தின் 18வது முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கிறார். 

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியானது முதற்கொண்டு அரசியலில் பெரும் குழுப்பங்களும், திருப்பமும் ஏற்பட்டது. பாஜகவுடன் கூட்டணி வைத்த சிவசேனா முதலமைச்சர் பதவிக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகி தற்போது காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.  இந்நிலையில் சிவசேனாவுக்கு ராசியான மைதானமாக கருதப்படும் மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று மாலை உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். அவருக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 

உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது. 

மேலும், டெல்லி சென்ற உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே, பதவி ஏற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். இதேபோல் உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தபோது, பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும், பல முக்கிய தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான  ராகுல், கூட்டணி அமைக்கும் விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. மேலும், கூட்டணி தொடர்பாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த மக்களவை தேர்தலில் உத்தவ் தாக்கரே ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்த நிலையில், சிவசேனாவுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதை ராகுல் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், ராகுல் காந்தி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. இதேபோல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Newstm. 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP