சத்தீஸ்கரில் இரண்டு நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுக்கும், சி.ஆர்.பி.எப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், நக்சல்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
 | 

சத்தீஸ்கரில் இரண்டு நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகளுக்கும், சி.ஆர்.பி.எப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாரா மாவட்டம் குமியபால்(Gumiyapal) எனும் பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அங்கு சென்று நகசல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அவ்விடத்தில் பதுங்கியிருந்த நக்சல்கள், தொடர்ந்து சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர், இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP