முன்னாள் பிரதமர் குறித்த திரைப்படத்தை வெளியிடுவதிலும் சிக்கல்!

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள "தாஷ்கண்ட் பைல்ஸ்" திரைப்படத்தை வெளியிடக் கூடாது என இத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 | 

முன்னாள் பிரதமர் குறித்த திரைப்படத்தை வெளியிடுவதிலும் சிக்கல்!

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள "தாஷ்கண்ட் ஃபைல்ஸ்" திரைப்படத்தை வெளியிடக் கூடாது என இத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லால் பகதூர் சாஸ்திரியின் பேரனும், காங்கிரஸ் பிரமுகருமான விபாகர் சாஸ்திரி இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், " தாஷ்கண்ட் பைல்ஸ்" திரைப்படத்தின் ட்ரெய்லர், சமுதாயத்தில் தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கும் வகையில் உள்ளது. மேலும், இத்திரைப்படம் லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை தவறாக சித்திரிக்கும், பிரசார நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே இத்திரைப்படத்தை வெளியிடக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 12 -ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த தாஷ்கண்ட் பைல்ஸ் படத்துக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குநர்  விவேக் அக்னிஹோத்ரி கூறும்போது, "காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கொடுத்துள்ள அழுத்தத்தின் காரணமாகவே எங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை கண்டு அவர்கள் ஏன் பயப்படுகின்றனர் எனத் தெரியவில்லை?" என்று கூறியுள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP