பிரதமர் மோடியுடனான பயணம் எனது பாக்கியம்: பியர் கிரைல்ஸ்

பிரதமர் மோடியை காட்டுக்குள் அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம் என்று டிஸ்கவரி சேனல் Man Vs Wild நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரைல்ஸ் தெரிவித்துள்ளார்.
 | 

பிரதமர் மோடியுடனான பயணம் எனது பாக்கியம்: பியர் கிரைல்ஸ்

பிரதமர் மோடியை காட்டுக்குள் அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம் என்று டிஸ்கவரி சேனல் Man Vs Wild நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரைல்ஸ் தெரிவித்துள்ளார். 

டிஸ்கவரி சேனலில் மிகவும் பிரபலமான Man Vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். அந்நிகழ்ச்சியில் வரும் பியர் கிரைல்ஸ் உடன் மோடி காட்டுக்குள் பயணம் செய்யும் அந்த நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 12 -ஆம் தேதி, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

பிரதமர் மோடியுடனான அனுபவம் குறித்து பியர் கிரைல்ஸ் கூறும்போது, "வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலே ஒபாமா மற்றும் மோடியுடன் பயணம் செய்துள்ளேன். 

பிரதமர் மோடியுடனான பயணம் எனது பாக்கியம்: பியர் கிரைல்ஸ்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் தேசியப்பூங்காவில் காட்டுக்குள் சென்றோம். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மிகவும் அமைதியாக இருந்தார். தைரியமாகவும் இருந்தார். அவரை அழைத்துச் சென்றது என்னுடைய பாக்கியம்.

காட்டுக்குள் பயணம் செய்யும் பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் யோசிப்பர். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார். அவருடைய உடையில் அவர் மிகவும் அழகாக தெரிந்தார். பயணம் சற்று கடினமாகவே இருந்தது. பெரிய கற்கள், கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. உலகத் தலைவர் ஒருவருடனான பயணம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. பிரதமர் என்பதை மறந்து அவர் மிகவும் சாதரணமாக பயணித்தார். எப்போதுமே அவரது முகத்தில் புன்னகை இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP