Logo

பெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் & சிறைத்தண்டனை!

பெங்களூரு மெட்ரோவில் குறிப்பிட்ட தூரத்திற்கு அதிகமாக பயணம் செய்தாலோ அல்லது டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ ரூ. 50 அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 | 

பெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் & சிறைத்தண்டனை!

பெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு அதிகமாக பயணம் செய்தாலோ ரூ. 50 அபராதம், அதிகபட்சமாக ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு மெட்ரோவில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் சில புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, பெங்களூரு மெட்ரோவில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தாலோ, குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டும் டிக்கெட் எடுத்துவிட்டு, அதைவிட அதிக தூரம் பயணம் செய்தாலோ, முறையான பாஸ் இல்லாமல் பயணம் செய்வதோ கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகபட்சமாக ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெட்ரோ சட்டம் 2002ன் படி, இந்த விதிமுறைகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், ஏற்கனவே டெல்லி உள்ளிட்ட மற்ற மெட்ரோ நிலையங்களில் இது நடைமுறையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர, பெங்களூரு மெட்ரோ கார்டில் ரூ.50க்கு குறையாமல் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையால் மெட்ரோ வருவாய் ஏற்கனவே பின்னடைவில் இருப்பதால், இந்த அபராத விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது என்று மெட்ரோ நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP