டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய போலி ஐடிகளைப் பயன்படுத்தும் பயணிகள்!

மத்திய ரயில்வேயில் பயணிகள் போலி அடையாள அட்டையை வைத்து பயணம் செய்வது அதிகாரித்து வருவதாக ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய ரயில்வே பிரிவில் இது போன்ற டிக்கெட் இன்றி செல்வோர் அபராதங்களை தவிர்ப்பதற்காக போலியாக போலீஸ் மற்றும் ரயில்வேயில் வேலை செய்வோர் போன்ற அடையாள அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 16க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சமீபத்தில் கடந்த 17ஆம் தேதி கட்கோபர் ரயில் நிலையத்தில், சட்கபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸின் செல்லும் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த விலாஸ் மாதவ் மோர் (33) என்ற பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தனஞ்சய் குமார் யாதவ் டிக்கெட்டை காண்பிக்கும்படி கூறியுள்ளார். ஆனால், அவர் போலீஸ் அடையாள அட்டையை காட்டியுள்ளார். அந்த அடையாள அட்டை போலியானது என கண்டுபிடித்த அதிகாரி அந்த பயணி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

Newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP