டெல்லியில் பாஜக எம்.பிக்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது!

பாஜக எம்பிக்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
 | 

டெல்லியில் பாஜக எம்.பிக்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது!

பாஜக எம்.பிக்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நாடளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள பாஜக எம்.பிக்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு பயிற்சி முகாம் அளிக்கப்படுகிறது. டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டிடத்தில் உள்ள பாலயோகி அரங்கத்தில் இன்றும், நாளையும் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் மசோதாக்களின் மீதான விவாதத்தில் கருத்துக்களை எப்படி எடுத்துரைப்பது? எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு எவ்வாறு சிறந்த முறையில் பதிலளிப்பது? உள்ளிட்டவை குறித்து எம்.பிக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டு எம்.பிக்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளனர். 

முன்னதாக, இந்த பயிற்சி முகாமில் அனைத்து பாஜக எம்.பிக்களும் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP