மோடி படத்துடன் ரயில் டிக்கெட் - இரண்டு ஊழியர்கள் பணியிடைநீக்கம்

உத்தரப் பிரதேச மாநிலம், பராபங்கி ரயில் நிலையத்தில் நேற்று கொடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகளில் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில் இரண்டு ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.
 | 

மோடி படத்துடன் ரயில் டிக்கெட் - இரண்டு ஊழியர்கள் பணியிடைநீக்கம்

பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை வழங்கிய 2 ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மோடியிடன் படம் இடம்பெற்றுள்ள ரயில் பயணச்சீட்டுகள், தேநீர் கோப்பைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், பராபங்கி ரயில் நிலையத்தில் நேற்று கொடுக்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகளில் மோடியின் படம் இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில் இரண்டு ஊழியர்களை ரயில்வே நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. ஓய்வு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய ஊழியர்கள், தவறுதலாக பழைய பேப்பர் ரோல் எடுத்து அச்சிட்டு கொடுத்திருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP