மும்பை வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள் அனைவரும் மீட்பு; சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு!

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
 | 

மகாராஷ்டிர மாநிலம் மும்பை - கொல்ஹாபூர் இடையே செல்லும் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3 மணியளவில்  பட்லபூர் - வாங்கனி இடையே கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. இந்த பகுதிக்கு அருகே உள்ள உல்ஹாஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் முழுவதும் நீர் சூழ்ந்தன. 

தொடர்ந்து, ரயிலில் சிக்கிய பயணிகளை மீட்கும்பொருட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஒரு சில மணி நேரங்களிலேயே மிகவும் துரிதமாக செயல்பட்டு ரயிலில் இருந்த 700 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

தற்போது மீட்கப்பட்ட பயணிகள் அருகில் ஒரு கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயணிகள் இருக்கும் பகுதியான கல்யாண் - கொல்ஹாபூர் இடையே 19 பெட்டிகளை கொண்ட ஒரு சிறப்பு ரயிலில் இவர்கள் ஏற்றிச்செல்லப்பட்டு முக்கிய பகுதிகளில்  இறக்கிவிட ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP