வெள்ளத்தின் நடுவே சிக்கிய ரயில்; சுமார் 700 பயணிகள் தவிப்பு

மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் நடுவில் சிக்கிய ரயிலில் உள்ள சுமார் 700 பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 | 

வெள்ளத்தின் நடுவே சிக்கிய ரயில்; சுமார் 700 பயணிகள் தவிப்பு

மகாராஷ்டிராவில் வெள்ளத்தின் நடுவே சிக்கிய ரயிலில் உள்ள சுமார் 700 பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

மும்பை மற்றும் கொல்ஹாபூர் இடையே செல்லும் மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தானே பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியது. மும்பையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் பட்லபூர் - வங்கனி இடையே உல்ஹாஸ் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. இன்று காலை 3 மணி முதல் ரயில் அவ்விடத்திலே நிற்கும் நிலையில் உள்ளிருக்கும் பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ரயில் தண்டவாளங்கள் முழுவதும் நீரால் சூழ்ந்துள்ளது. சுமார் 700 பயணிகள் அதில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வெள்ளத்தின் நடுவே சிக்கிய ரயில்; சுமார் 700 பயணிகள் தவிப்பு

தற்போது ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும்பொருட்டு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் படகுகளுடன் அவ்விடத்திற்கு விரைந்து தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஹெலிகாப்டர் மூலமாக ரயிலினுள் இருக்கும் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP