4 ஆண்டுகளாக இந்தியாவில் சகிப்பின்மை நிலவுகிறது: ராகுல் காந்தி

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் சகிப்பின்மை நிலவி வருகிறது என்று இரண்டு நாள் பயணமாக துபாய் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள இந்தியர்கள் முன்பு பேசினார்.
 | 

4 ஆண்டுகளாக இந்தியாவில் சகிப்பின்மை நிலவுகிறது: ராகுல் காந்தி

கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் சகிப்பின்மை நிலவி வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

2 நாள் பயணமாக துபாய் சென்றுள்ள அவர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது பேசிய ராகுல், "ஐக்கிய அரபு அமீரகத்தையும் ஒன்றிணைப்பது சகிப்புத்தன்மைதான். 2019ம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாக சகிப்பின்மை நிலவி வருகிறது.

இந்நாட்டிலுள்ள பெரிய கட்டடங்கள், அகண்ட விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் கட்டமைப்பு ஆகியவை, இந்திய தொழிலாளர்களாகிய உங்களின் பங்களிப்பு இல்லாமல் உருவாகியிருக்க முடியாது. துபாயின் மேம்பாட்டுக்காக உங்களது வியர்வை, ரத்தம், காலம் ஆகியவற்றை அர்ப்பணித்திருக்கிறீர்கள். உங்களை பார்த்து, ஒட்டுமொத்த இந்திய சமூகமும் பெருமை கொள்கிறது.

நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நான் எனது மனதில் தோன்றியதை கூற இங்கு வரவில்லை. உங்களது பிரச்னைகளை அறிந்துகொள்ளவே வந்திருக்கிறேன். உங்களைப் போன்ற சாதாரண மனிதன்தான் நான். உங்களுக்கு ஆதரவாகவே எப்போதும் இருப்பேன். ஒரு போர் தொடங்கியிருக்கிறது. அதில் நாம்தான் வெல்லப் போகிறோம்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், முதல் நடவடிக்கையாக ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்" என்றார் அவர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP