திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் ரூ.3.13 கோடி உண்டியல் வசூல்

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் உண்டியலில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 300 ரூபாய் டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
 | 

திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் ரூ.3.13 கோடி உண்டியல் வசூல்

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசித்த பக்தர்கள் உண்டியலில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இலவச தரிசனத்துக்காக வைகுண்டம் காம்ப்ளக்சில் காத்திருந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதை வழியாக நடந்து வந்த திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 11 மணி நேரமும் 300  ரூபாய் டிக்கெட் எடுத்த பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று ஏழுமலையானை தரிசனம் செய்த 70,713 பக்தர்கள் உண்டியலில் சுமார் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP