Logo

படிக்காதவர்கள்தான் போர் பற்றி பேசுகிறார்கள்: மெஹ்பூபா முப்தி

புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், படிக்காதவர்கள் தான், தற்போது போர் பற்றி பேசுவார்கள், என்றும் காஷ்மீரின் முதல்வர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார்.
 | 

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், 49 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காரணம், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம், பாகிஸ்தானுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி கொடுத்து வருகிறது.

புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக இந்தியா கூறிவரும் நிலையில், போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தினார். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி, இது பற்றி பேசியபோது, "பேச்சுவார்த்தையை விட்டுவிட்டு போருக்கு செல்வதற்கான நேரம் இது இல்லை. முட்டாள்கள்தான் போருக்கு செல்ல வேண்டுமென்று இதுபோன்ற நேரத்தில் சொல்வார்கள். பதன்கோட் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா ஆதாரங்களை சமர்ப்பித்தும் பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை நான் உணர்கிறேன். ஆனால் இம்ரான் கான் புதிதாக பதவியேற்றுள்ளார். அவருக்கு நாம் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். எனவே, இந்த தாக்குதல் குறித்த ஆதாரங்களை அவருக்கு அனுப்ப வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP