3ம் கட்ட மக்களவைத் தேர்தல்: களைகட்டும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்!

கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளில் ஏப்ரல் 23 அன்று 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.
 | 

3ம் கட்ட மக்களவைத் தேர்தல்: களைகட்டும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்!

கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளில் ஏப்ரல் 23 அன்று 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில், மூன்றாம் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. மூன்று யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 14 மாநிலங்களில் மொத்தம் 115 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். எனவே. கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது. 

ஏப்ரல் 23 அன்று கோவா, டையூ டாமன், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்கள், குஜராத், கேரளா ஆகிய 2 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தவிர அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 

முக்கியமாக உத்தரபிரதேசம், கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கிய தலைவர்கள் இறுதிக்கட்ட தேர்தல்பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP