எல்.ஜி.பி.டி சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களை இத்தனை ஆண்டுகள் அவர்களிடம் பாகுபாடு காட்டி, தனிமைப்படுத்தப்பட்டதற்கு வரலாறு மன்னபிப்பு கேட்கும் என தன்பாலின உறவு வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 | 

எல்.ஜி.பி.டி  சமூகத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்!

எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களை  இத்தனை ஆண்டுகள்  பாகுபாடு காட்டி, தனிமைப்படுத்தியதற்கு, அவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும் என தன்பாலின உறவு வழக்கில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தன்பாலின உறவை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் 377 சட்டப்பிரிவை ரத்து செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கில் இன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. 

இதில் தன்பாலின உறவு குற்றச்செயல் அல்ல என தெரிவித்துள்ளது. மேலும் அவர்களது தீர்ப்பில், ''நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல. 

“I am what I am. So take me as I am. No one can escape from their individuality”, says CJI Dipak Misra.

ஒருவரின் சுய கருத்தை வெளியிடுவது தடை செய்யப்படுமானால் அது மரணத்தைப் போன்றது. சமத்துவம் என்ற கம்பீரமான கட்டடத்தின் மீதே மற்ற எல்லா கம்பீரமான கட்டடமும் சார்ந்திருக்கிறது. நமக்குள் உள்ள வேற்றுமையின் பலத்தை நாம் மதிக்க வேண்டும். ஒருவர் எதுவாக இல்லையோ, அதை அவர்கள் மீது திணிப்பதைவிட ஒவ்வொருவரிடம்  உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிற மனிதர்களைப்போலவே, இயல்பான மனிதர்களாகவும் அடிப்படை உரிமைகளுடனும் இருக்கும் உரிமை எல்.ஜி.பி.டி சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உள்ளது. இத்தனை ஆண்டுகள் அவர்களிடம் பாகுபாடு காட்டி, தனிமைப்படுத்தியற்கு அவர்கள் நம்மை மன்னிக்க வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP