"தீவிரவாதத்தை நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை"

இந்திய பாகிஸ்தான் இடையே, பின்னணி பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை என்றும், தீவிரவாதத்தை நிறுத்தும் வரைஅந்நாட்டுடன் எந்த சமாதான பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை, என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 | 

ஒவ்வொரு வாரமும் இந்திய வெளியுறவுத்துறை நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில், இன்று பல்வேறு கேள்விகளுக்கு செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலளித்தார். ரஷ்யாவுடனான S-400 வான் பாதுகாப்பு திட்டம் குறித்து கேட்டதற்கு, "இந்திய பாதுகாப்புக்கு S-400 மிக முக்கியம். இதுகுறித்து அமெரிக்காவுடன் பேசியுள்ளோம். இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் தொடர்பில் இருப்போம்" என தெரிவித்துள்ளார். 

அதுபோல, ஈரான் மீதான எண்ணெய் தடை குறித்து பேசியபோது, அது ஈரானுக்கான தண்டனை தான், இந்தியாவுக்கு அல்ல, என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பாம்பேயோ கூறியதாக தெரிவித்தார். பிரான்ஸுடனான உறவு குறித்து பேசியபோது, இந்தியாவும், பிரான்சும், மிக நெருக்கமான உறவை கொண்டுள்ளதாக கூறினார். 

இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்தவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. பின்னணி பேச்சுவார்த்தைகள் ஏதாவது நடைபெற்றனவா என செய்தியாளர்கள் கேட்க, "விதவிதமான பேச்சுவார்த்தைகள் எல்லாம் நடத்துவது பற்றி எந்த திட்டமும் கிடையாது. ஆனால், தீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை என்பதில் இந்தியா திட்டவட்டமாக உள்ளது. பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யபட்டதற்கு அதுவும் ஒரு காரணம்" என்றார் ரவீஷ் குமார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP