காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்

கார்கில் போர் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
 | 

காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது: ராஜ்நாத் சிங்

கார்கில் போர் 20ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்றார். கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து போர் தொடர்பான முக்கிய தகவல்கள் அடங்கிய நினைவுப்பாதை ஒன்றையும் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் ஜிதேந்திர சிங், ராணுவத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றிருந்தனர்.

தொடர்ந்து ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், "காஷ்மீர் பிரச்சினையில் விரைவில் தீர்வு காணப்படும். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்பட முடியாவிட்டால், எம்மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும் என்று நமக்கு தெரியும். காஷ்மீரில் இருக்கும் அமைப்புகள் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் நான் அவர்களுடன் பேசத் தயார். நாட்டில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளது. அந்த வகையில், காஷ்மீரில் தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதனை எதிர்கொண்டு வெற்றி பெறும்"என்று கூறியுள்ளார்

காஷ்மீரின் கார்கில் பகுதியில் 1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 2 மாதங்களாக நடைபெற்ற போரில் 'ஆப்ரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியப் படைகள் போரிட்டு வெற்றி பெற்றது. இந்த போரின் 2வது ஆண்டு தினம் தற்போது அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP