விக்ரம் லாண்டர் தரையிறக்கம் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் நிகழ்ந்தது - இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் 2 விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் தரையிறங்கியது என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது இஸ்ரோ.
 | 

விக்ரம் லாண்டர் தரையிறக்கம் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் நிகழ்ந்தது - இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சந்திராயன் 2 விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் தரையிறங்கியது என்பது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது இஸ்ரோ. 

சந்திராயன் 2 விக்ரம் லாண்டர் நிலவில் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் தரையிறங்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அது பற்றிய எந்த கருத்தையும் இதுவரை வெளியிடாமல் மௌனம் காத்து வந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், தற்போது அதன் தரையிறக்கம்  ஹார்ட் லாண்டிங் மூலம் தான் நிகழ்ந்தது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தரையிறக்கம் நிகழ்ந்து சுமார் இரண்டரை மாதங்களுக்கு பிறது நேற்று தான் இது பற்றிய கருத்தை வெளிப்படையாக இஸ்ரோ அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில், மக்களவையில் நேற்று உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்கிடம் இது குறித்த கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நிலவில் தரையிறங்குவதற்காக விக்ரம் லாண்டரின் வேகத்தை குறைத்து வடிவமைத்திருந்தது இஸ்ரோ. எனினும், தரையிறங்கும் நேரத்தில் அதன் வேகம் குறையாதது தான் இந்த ஹார்ட் லாண்டிங்கிற்கு காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். 

விக்ரம் லாண்டரின் தரையிறக்கம் குறித்து இதுவரை எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தது இஸ்ரோ. கடந்த செப்டம்பர் மாதத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடும் போதும், லாண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதற்கான காரணங்களையும் தான் குறிப்பிட்டிருந்தாரே தவிர அதை பற்றிய வேறு எந்த தகவலையும் அவர் வெளியிடாத நிலையில், நேற்றைய விண்வெளி அமைச்சகத்தின் தகவல் தான் லாண்டரின் தரையிறக்கம் பற்றி முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP