மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. !

ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என, ஐ.நா.வுக்கான இந்திய தூதரும், நிரந்தர பிரதிநிதியுமான சையது அக்பருதீன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 | 

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது ஐ.நா. !

ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என, ஐ.நா.வுக்கான இந்திய தூதரும், நிரந்தர பிரதிநிதியுமான சையது அக்பருதீன் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தமக்குள்ள "வீ்ட்டோ" அதிகாரத்தை பயன்படுத்தி, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல், சீனா இதுநாள் முட்டுக்கட்டை கொடுத்து வந்தது.

இந்த நிலையில், மசூத் அசார் விஷயத்தில் தங்களது நிலைப்பாட்டை சீனாவும், பாகிஸ்தானும் மாற்றிக் கொண்டதையடுத்து, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளது, பயங்கரவாத்தை ஒழிப்பதற்காக சர்வதேச அளவில் இந்தியா எடுத்து வரும் ராஜ்ஜியரீதியான பல்வேறு நடவடிக்கைகளுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

ஜம்மு -காஷ்மீர் மாநிலம், உரியில் உள்ள ராணுவ முகாம்களின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்  தொடங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 14 -ஆம் தேதி, புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப் ) வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல்  வரை,  இந்தியாவில் அரங்கேற்றப்பட்டுள்ள பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலை, பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ் -இ-முகமது பயங்கரவாத அமைப்பு நடத்தியுள்ளது.

இதையடுத்து, இந்த அமைப்பின் தலைவனான மசூத் அசாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

ஐ.நா.வின் இந்த அறிவிப்பை பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஐ.நா.வின் இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP