2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்

2019-ம் ஆண்டின் மிகவும் பெரிதான, வெளிச்சமான நிலவு இன்று மட்டுமே பூமியில் உள்ளவர்களுக்குத் தென்படும்.
 | 

2019வது ஆண்டின் சூப்பர் மூன் இன்று மட்டுமே தெரியும்

2019-ம் ஆண்டின் மிகவும் பெரிதான, வெளிச்சமான நிலவு இன்று மட்டுமே பூமியில் உள்ளவர்களுக்குத் தென்படும்.

இன்று வழக்கத்துக்கு மாறாக பூமியிலிருந்து பார்க்கப்படும் நிலவின் அளவு 15 முதல் 30 சதவிகிதம் பெரிதாக  தெரியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சூப்பர் நிலவை பூமியில் உள்ள அத்தனை நாடுகளிலிருந்தும் காண முடியும். குறிப்பாக இந்தியாவில் உள்ள அத்தனை நகரங்களிலிருந்தும் வெறும் கண்களாலே இன்று நிலவைப் பார்க்க முடியும். 

பிப்ரவரி 19-ம் தேதியான இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் சூப்பர் நிலவை மிகவும் பெரிதாகக் காண முடியும். இதேபோல், அதிகாலையில் நிலவு மறையும் நேரத்திலும் சூப்பர் நிலவின் தோற்றம் மிகவும் அழகானதாகத் தெரியும் எனக் கூறப்பட்டுள்ளது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP