கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி இல்லை! - பாஜக அரசு முடிவு

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தனிக்கொடி முறை கடைவிடப்படுவதாக பாஜக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 | 

கர்நாடக மாநிலத்திற்கு தனிக்கொடி இல்லை! - பாஜக அரசு முடிவு

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் தனிக்கொடி முறை கடைவிடப்படுவதாக பாஜக தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற போது, கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மாநிலத்திற்கு  என்று தனிக்கொடியை அறிமுகம் செய்தார். மேலும், இதற்கு மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தற்போது கர்நாடகாவில் பாஜக அரசு ஆட்சி செய்து வருவதை அடுத்து, கர்நாடக மாநில தனிக்கொடி முடிவை கைவிட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடியை தவிர மூவர்ண நிறங்களுடன் மற்றொரு கொடியை மாநிலத்தில் வைப்பதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை என்று காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக மாநில தனிக்கொடியானது மஞ்சள், வெள்ளை, மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களுடன், மத்தியில் மாநில அரசின் லோகோ இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP