Logo

இந்த மாதத்திற்குள் ஆதாரை பான் கார்டுடன் இணைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

வருமான வரி ரிட்டர்ன் ஃபைல் செய்வோர் இந்த மாதத்துடன் தங்களது பேன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. எனவே மார்ச் 31ம் தேதிக்குள் இதனை செய்ய வேண்டும்.
 | 

இந்த மாதத்திற்குள் ஆதாரை பான் கார்டுடன் இணைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

வருமான வரி  ரிட்டர்ன் ஃபைல் செய்வோர் இந்த மாதத்துடன் தங்களது பேன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வருமான வரித்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் உத்தரவின்படி வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய ஆதார் அட்டையை பேன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும். 

இதனை எப்படி செய்வது...

இதனை இணையதளம், எஸ்எம்எஸ், ஐடிஆர் மற்றும் பேன் விண்ணப்பம என நான்கு வழிகளில் செய்யலாம். 

ஐடிஆர்:  வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போதே, ஆதார் அட்டை மற்றும் பேன் கார்ட்டை இணையத்தில் இணைத்துக்கொள்ளலாம். இதற்கான லிங்க்குகள் tin-nsdl.com மற்றும் utiitsl.com. 

எஸ்எம்எஸ்:  567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12-digit Aadhaar> <10-digit PAN> என அனுப்பவேண்டும். 

இணையதளம்: incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்த இதனை செய்யலாம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தில் "link Aadhaar"  என்பதை கிளிக் செய்து இதனை செய்யலாம். 

பேன் கார்ட்டு விண்ணப்பம்: 
புதிதாக பேன் கார்ட் விண்ணப்பிபவர்கள், அப்போது ஆதார் எண் கொடுத்து இணைத்துக் கொள்ளலாம். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP