வருமான வரித் தாக்கலுக்கும் இனி ஆதாரை பயன்படுத்தலாம் : நிர்மலா சீதாராமன்

வருமான வரி கணக்கு தாக்கலின்போது விண்ணப்பதாரர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை (PAN) குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருமான வரித் தாக்கலுக்கு இனி ஆதார் எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
 | 

இதுதொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது பட்ஜெட் உரையில் கூறும்போது, "நாட்டில் 120 கோடி பேருக்கு மேற்பட்டவர்களிடம் தற்போது ஆதார் அட்டை உள்ளது. எனவே, பான் அட்டை இல்லாதவர்கள், வருமான வரி கணக்கு தாக்கலின்போது, தங்களின் விண்ணப்பத்தில் இனி ஆதார் எண்ணை குறிப்பிட்டால் போதும். அதேசமயம், பான் எண் தேவைப்படும் இடத்தில் அதனை குறிப்பிட்டே ஆக வேண்டும். வருமான வரித் தாக்கலை எளிமையாக்கும் விதத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP