12 வருட சிறு சேமிப்பில் தாய்க்கு ப்ரிஜ் வாங்கி கொடுத்த மகன்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரில், குளிர்சாதன பெட்டி வாங்க வேண்டும் என்ற தனது தாயின் நெடுநாள் கனவை, தன் 12 வருட சிறு சோமிப்பின் மூலம் நினைவாக்கியுள்ளார் 17 வயது சிறுவனான ராம் சிங்.
 | 

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 17 வயது ராம்சிங், தன் தாய் ப்ரிஜ் வாங்க ஆசைப்பட்டதாகவும், அவரின் அந்த ஆசையை நிறைவேற்றுவதற்காகவே 12 ஆண்டுகளாக சேமித்து வந்ததாகவும் கூறினார். தனது சேமிப்பில் கிடைக்கும் ரூபாய் நோட்டுகளை தனது தாயிடம் கொடுத்துவிட்டு சில்லரைகளாக சேமித்த பணத்தில் தான் குளிர்சாதன பெட்டி வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

12 வருடங்களாக சேமித்த 35 கிலோ எடையிருந்த சில்லரை மூட்டையுடன் அவர் கடைக்குள் நுழைந்ததை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். இறுதியாக குளிர்சாதன பெட்டி வாங்க 2,000 ரூபாய் குறைந்த நிலையில், தாய் மீது அந்த சிறுவன் வைத்திருந்த அன்பை கண்டு விக்கித்து நின்ற கடை முதலாளி 2,000 ரூபாயை தள்ளுபடி செய்துவிட்டார்.

இது குறித்த கூறிய ராம் சிங், "ப்ரிஜ் வாங்க வேண்டுமென்பது எனது அம்மாவின் நீண்ட நாள் கனவு. அதற்காகதான் நான் சேமிக்கத்தொடங்கினேன். அவரின் ஆசையை நிறைவேற்றியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று சந்தோஷமாக கூறியுள்ளார்.

சிறு சேமிப்பு நம் எதிர்காலத்திற்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதை 17 வயது சிறுவனான ராம்சிங் நமக்கு நிரூபித்துக்காட்டியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP