பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது: குமாரசாமி

மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 | 

கர்நாடகாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா நேற்று முன்தினம் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிலையில், குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுக்கு ஆதரவளிக்கவிருப்பதாக தகவல் வெளியாகின. இதுகுறித்து மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது உண்மைக்கு புறம்பானது. அடிப்படை ஆதாரமற்றது. மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மக்களுக்காக நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். எடியூரப்பா தலைமையிலான அரசு மக்களுக்கு நல்லது செய்யும் பட்சத்தில், அதனை நாங்கள் வரவேற்போம். கட்சியும் அடிமட்டத்தை வலுவாக்க முயற்சி செய்வோம்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP