துப்பாக்கியை காட்டி மிரட்டி சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தப்பிய நபருக்கு வலை

சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியரிடம் தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, சுங்கக் கட்டணம் செலுத்தாமல் காரில் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
 | 

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஓர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு, வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் நின்று, சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு சென்று கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியே வந்த ஒரு கார், சுங்கச் சாவடியின் நின்றது. 

அதிலிருந்து வெளியே வந்த நபர், தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி, சுங்கச் சாவடி ஊழியரை மிரட்டினார். பின், டோல் கேட்டை தானே திறந்து கொண்டு, சுங்கக் கட்டணம் செலுத்தாமல் காரில் தப்பிச் சென்றார். சுங்கச்சாவடி ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பிச் சென்ற நபரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP