150 டன் குப்பைகளை கரை ஒதுக்கிய கடல் அலைகள்

தாதர், ஜூகு, மரைன் லைன்ஸ், வெர்சோவா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில், இதுவரை சுமார் 150 டன் குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன.
 | 

150 டன் குப்பைகளை கரை ஒதுக்கிய கடல் அலைகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, தலைநகர் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் ஏற்படும் மிகப்பெரிய அலைகளால், கடலில் உள்ள குப்பைகள் கரை ஒதுக்கப்படுகின்றன. தாதர், ஜூகு, மரைன் லைன்ஸ், வெர்சோவா  உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில், இதுவரை சுமார் 150 டன் குப்பைகள் கரை ஒதுங்கியுள்ளன. கடும் சிரமப்பட்டு, இயந்திரங்கள் மூலமும், மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடனும், குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP