பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்!

ஹரியானா மாநிலம், கைதாள் மாவட்டத்துக்குட்பட்ட டாக்ரா கேட் பகுதியில் இன்று காலை, கழிவுநீர் கால்வாய்க்குள் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அ
 | 

பெற்ற குழந்தையை சாக்கடையில் வீசிய தாய்... காப்பாற்றிய நாய்!

ஹரியானா மாநிலம், கைதாள் மாவட்டத்துக்குட்பட்ட டாக்ரா கேட் பகுதியில் இன்று காலை, கழிவுநீர் கால்வாய்க்குள் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்த இரண்டு தெரு நாய்கள் குழந்தையின் கூக்குரலை கேட்டு, அதன் அருகில் சென்று குரைக்க தொடங்கியுள்ளன. அத்துடன், வாயினால் கவ்வி அக்குழந்தையை வெளியே எடுத்துள்ளன.

இதனை கவனித்த பொதுமக்கள், உடனே போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்த போலீஸார், பச்சிளம் பெண் குழந்தையை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீஸார் ஆராய்ந்தபோது, அக்குழந்தையின் தாயே, அதனை பாலிதீன் பையில் கட்டி, கழிவுநீர் கால்வாயில் தூக்கி வீசி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அப்பெண்ணை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP