பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்

காஷ்மீர் வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம்மின் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது. அது தொடர்பாக வீடியோ ஒன்றையும் ராணுவம் வெளியிட்டுள்ளது.
 | 

பாகிஸ்தானின் பார்டர் ஆக்ஷன் டீம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரான ஹஜி பிர் பகுதியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதி இரவு ஊடுருவ முயற்சித்தனர். இதையடுத்து, உடனடியாக பேட் குழுவின் ஊடுருவல் முயற்சியை கையெறி ஏவுகணைகளைப் பயன்படுத்தி இராணுவம் முறியடித்துள்ளது. ஊடுருவல் தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பாகிஸ்தானின் எல்லையருகே 15 ஊடுருவல் முயற்சிகளை ராணுவம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP