மக்களுக்கு ஓர் நற்செய்தி..கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.62 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
 | 

மக்களுக்கு ஓர் நற்செய்தி..கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது!

மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.62 குறைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியன் ஆயில் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மானியம் மற்றும் மானியமில்லாத சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிலிண்டரின் விலையை நேற்று இரவு அறிவித்தது. 

அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.62 குறைக்கப்பட்டு இம்மாதம் ரூ. 590.50 -க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நேற்று நள்ளிரவு(ஆகஸ்ட் 1)முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதே மானியமில்லா கேஸ் சிலிண்டர் கடந்த மாதம் ரூ.652.50 விற்கப்பட்டது. மானியமில்லா சிலிண்டரின் விலை கடந்த 2 மாதத்தில் மட்டும் ரூ. 163 குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP