ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய பிரபல இசைக்கலைஞர் காலமானார்

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மங்களூருவில் இன்று காலமானார்.
 | 

ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய பிரபல இசைக்கலைஞர் காலமானார்

புகழ்பெற்ற சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மங்களூருவில் இன்று காலமானார். 

கத்ரி கோபால்நாத் உடல்நலக்குறைவால் கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 69.

மறைந்த கத்ரி கோபால்நாத் கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தார். கலாநிகேதனாவை சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயரிடம் சாக்சபோன் வாசிப்பை கற்றவரான கத்ரி கோபால்நாத், கடினமான வாத்தியக் கருவியான சாக்சபோனை இளவயதிலேயே கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமின்றி மேற்கத்திய இசைவடிவினை வாசிப்பதர்கென்று உருவாக்கப்பட்ட சாக்சபோனில் கர்நாடக இசையை சரளமாக வாசிக்கும் திறனை வளர்த்துக் கொண்டார். மேலும் அந்த வாத்தியத்தில் கர்நாடக இசையை வாசித்து உலகில் மிகப்பிரபலமான இசைக் கலைஞராக திகழ்ந்து வந்தார். சென்னையில் பிரபல மிருதங்க இசைக்கலைஞர் டி.வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் இசைப்பயிற்சி பெற்றார். 

சாக்சபோன் மேதை கத்ரி கோபால்நாத்தின் இசை சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு 2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் வழங்கியும், தமிழக அரசு கலைமாமணி பட்டம் வழங்கியும் கவுரவித்துள்ளது. மேலும்,  சாக்சபோன் சக்ரவர்த்தி, சாக்சபோன் சாம்ராட், கர்நாடக கலாஸ்ரீ உள்ளிட்ட பட்டங்களையும் அவர் பெற்றுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றிய பிரபல இசைக்கலைஞர் காலமானார்

கே.பாலச்சந்தரின் டூயட் படத்தில் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து பணியாற்றியுள்ள கத்ரி கோபால்நாத், அப்படத்தின் அனைத்து பாடல்களிலும் அவரின் சாக்சபோன் இசை பயன்படுத்தப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP