காலக்கெடு முடிந்தது; ஆளுநரின் உத்தரவை மீறிய முதல்வர்!

ஆளுநர் விதித்த காலக்கெடு முடிந்த நிலையிலும், கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
 | 

காலக்கெடு முடிந்தது; ஆளுநரின் உத்தரவை மீறிய முதல்வர்!

ஆளுநர் விதித்த காலக்கெடு முடிந்த நிலையிலும், கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமியின் ஆட்சியின் மீது, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நாள் முழுவதும் நடைபெற்றது. நேற்று அவை ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில், வேண்டுமென்றே நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று(ஜூலை 19) பிற்பகல் 1.30 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறிஇருந்தார். ஆனால், ஆளுநர் விதித்த காலக்கெடு முடிந்த நிலையிலும் கர்நாடக சட்டப்பேரவையில் இதுவரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP