சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில், கட்சியின் மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளிக்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
 | 

சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் எடுக்கும் பிரம்மாஸ்திரம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் புது வகையான பிரம்மாஸ்த்திரத்தை காங்கிரஸ் கையில் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அக்கட்சி வாய்ப்பளிக்காது என்று கூறப்படுகிறது.

தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக பிரசாரப் பணிகளில் கவனம் செலுத்துமாறு மூத்த தலைவர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சையை தவிர்க்கும் வகையில், கோஷ்டித் தலைவர்களுக்கு இடையே தேர்தல் சமயத்தில் ஏற்படும் கருத்து மோதல்களை தவிர்க்கவும் இந்த புதிய முயற்சியை காங்கிரஸ் கையாளுவதாகத் தோன்றுகிறது.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், மூத்த தலைவர் அசோக் கெலாட், சி.பி.ஜோஷி உள்ளிட்டோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. 

கடந்த 2012ல் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மூத்த தலைவர் விஜய் பகுகுணா போட்டியிடவில்லை. ஆனால், தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்வராகப் பதவியேற்ற அவர், பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தல் மூலமாக சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அதே பாணியை மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கடைப்பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP