ஒற்றுமைக்கும் வெறுப்புக்கும் இடையே நடக்கும் போர்: ராகுல் பாய்ச்சல்

பிரதமர் மோடி தொடர்ந்து பொய் சொல்லி வருவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஒற்றுமைக்கும், வெறுப்புக்கும் இடையே நடைபெறும் போர் என்று தெரிவித்துள்ளார்.
 | 

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாட்டின் முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது பிரசாரங்களில் பிரிவினையை உண்டாக்குவதாகவும், வெறுப்பை பரப்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, "மோடிஜி தினமும் தனது பேச்சுக்களில் பொய் சொல்லி வருகிறார். அவர் எங்கு சென்றாலும் எதையாவது பற்றி பொய் சொல்கிறார். அவர் நிரவ் மோடி, லலித் மோடி, மெஹுல் சோக்சி போன்ற பணக்காரர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் தான் சோக்கிதார் (காவலர்)" என்று கூறினார். 

மேலும், "இன்னும் சில நாட்களில் நம் நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர். ஒரு பக்கம் காங்கிரஸ், மறுபக்கம் பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ், மோடி. நாட்டை ஒன்றிணைத்து, மக்களை ஒன்றிணைத்து அன்பையும் சகோதரத்துவத்தையும் பரப்புவதற்காக நாம் பணியாற்றி கொண்டிருக்கிறோம். ஆனால், பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ், எங்கு சென்றாலும் வெறுப்பை கொண்டு செல்கின்றன. வெவ்வேறு மதங்கள், மொழிகள் பேசும் மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக திருப்பி விடுகின்றனர்" என்று ராகுல் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP