சந்திரயான்- 2 வெற்றிக்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி: இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் - 2 செயற்கைக்கோளை உருவாக்க உழைத்த இஸ்ரோ குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இஸ்ரோவின் தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.
 | 

சந்திரயான்- 2 வெற்றிக்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி: இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் - 2 செயற்கைக்கோளை உருவாக்க உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் - 2 விண்கலம்,  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இதன்பின்னர் இஸ்ரோவில் விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அதன் தலைவர் சிவன், "சந்திரயான் - 2 விண்கலம் புவி வட்டப்பாதையை சென்றடைந்துள்ளது. புவியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 15 முக்கிய கட்டங்களை கடந்து நிலவின் தென் துருவப்பகுதியில் இறங்கும். 

சந்திரயான்- 2 வெற்றிக்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றி: இஸ்ரோ தலைவர் சிவன்

இன்று இந்தியவிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். 100 கோடி மக்களின் கனவுகளை சுமந்து செல்கிறது சந்திரயான் - 2 விண்கலம். விண்வெளி அரங்கில் இந்திய தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கும். இஸ்ரோ மட்டுமல்ல; இந்திய மட்டுமல்ல; சந்திரயான் -2 வெற்றியை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்தும் பல செயற்கைகோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம். 

சந்திரயான் - 2 வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள். அனைவரின் கடின முயற்சியால் தான் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த குழுவானது தங்களது குடும்பங்களை மறந்து இரவு, பகல் பாராமல் உழைத்துள்ளதன் பலன் தான் சந்திரயான் - 2. எனவே இதற்கு காரணமாக இருந்த விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், டெக்னீஷியன்கள் என ஒட்டுமொத்த இஸ்ரோ குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசினார். 

newstm.in

பாரதத்தின் மற்றுமொரு மணிமகுடம் சந்திராயன் -2!

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP